நேற்றிரவே நான் இறந்து விட்டேன்.
என்னுடன் அமர்ந்து பேசாதவர்கள் எல்லாம்,
என்னைச் சுற்றி அமர்ந்து கொண்டார்கள்.
பசியால் நான் சுருண்டு கிடந்து இருப்பேன்,
இன்று அழுது கொண்டு துக்கம் அனுஷ்டிக்கிறார்கள்.
என் விலாசம் அறியாதவர்கள் கூட,
இன்று என் வீட்டு வாசலில் கூட்டமாய் நிற்கிறார்கள்.
கைக்குட்டை கூட வாங்கித் தராதவர்கள்,
கோடித் துணி போர்த்துகிறார்கள்.
எதிர் வரும்போது முகம் திருப்பியவர்கள்,
இன்று ரோஜா மாலை அணிவிக்கிறார்கள்.
தடுக்கி விழுந்த போது தூக்க யாருமில்லை,
இன்று உலகத்தார் யாரோ நால்வர்
என்னைத் தூக்கிச் செல்கிறார்கள்.
இன்று தான் அறிந்து கொண்டேன்
மரணம், வாழ்வை விட மேலானதென்று.

- மு.தனஞ்செழியன்

Pin It