நேசம் விழுங்கும் நெடுஞ்சாலை
நெக்குறுகிறது
முடிவெளியற்ற கருந்துளையில் ...

உன்மத்தம் தாங்கிய
பூங்காவின் கதவுகள்
அடைபடுகிறது
துருவேறிய அறுவை
சிகிச்சை கத்திக்குள்...

கீறல் விழுந்த
குறுந்தகடில்‌ ஒலிக்கும்
உறவின் பாடல்கள்
தஞ்சமடையும்
பாலை சப்பாத்தி இலை பழுத்தே கிடக்கிறது...

கதவிடுக்கில் சிக்கிய
அன்பின் விரல்கள்தான் அந்தோ பரிதாபம்.

- கார்த்திகா

Pin It