கையடக்கக் கைபேசிகளில்
முழுவதுமாய் அடைக்கப்பட்டு விட்டன
உறவுகளுக்கான எல்லைகள்.
அவசரம் என அழைப்பு விடுத்தாலும்
சிறிது நேரம் கழித்து
அழைப்பதாய்ச் சொல்லி
துண்டிக்கப்படும் இணைப்புகள்
தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே வைக்கப்படுகிறது

சினேகங்கள், புன்னகைகள்,
அன்பின் பரிமாற்றங்கள், அனுசரணைகள்
இவை அனைத்தும்
ஸ்மைலி என்ற ஒற்றைக் குறியீட்டில்
குமைந்து கிடக்கின்றது

தனக்கான
வெக்கையை, கழிவிரக்கத்தை
ஆற்றாமையை, மனத்தாங்கலை
வெளிப்படுத்த இயலாமல்
அடைபட்டுக் கிடக்கின்றது
ஆங்காங்கே தொலைந்து போன உறவுகள்

- எஸ்தர்

Pin It