மரங்களின் தலையில் குட்டி
வீட்டுக்குள் குடிவைத்தாயிற்று
ஒற்றைக் குழலில் பொழியும் மழையை
வினோதமாகப் பார்க்கின்றன
வேர்களில் ஒளிந்திருக்கும்
ஆதி ஜீன்கள்
சதுரமான வானத்தில் சுழலும்
மின்விசிறியால்
வேலையிழந்த இலைகளுக்கு
எப்போதாவது திறக்கும் சாளரத்தின்வழி
சிந்தும் வெயிலை
அவசரமாய் குடித்தும்
தாகம் தணியா ஆதங்கம்
நம்பி நீளும் கிளைகளுக்காகவாவது
இன்னும் சற்று நேரம்
எரிய விடுங்கள் அறைக்குள்ளிருக்கும்
சூரியனை.

- ந.சிவநேசன்

Pin It