அன்று ரத்தப் பிசுபிசுப்போடு
இருந்த சிலுவையை
கழுவாமல் விட்டதால்
என்னவோ இன்னுமும்
நவீன பிலாத்துகள்
ரத்தம் சொட்டும்
சிலுவையை சுவைக்கிறார்கள்
சிலுவை தேய்ந்து கொண்டிருக்கிறது.
இதோ தேய்ந்த சிலுவவையில்
அறையப் படுகிறான்
தினந்தோறும் ஒருவன்.

- ப.தனஞ்ஜெயன்

 

Pin It