இப்போதெல்லாம்
வயிற்றில் கரு உண்டானவுடனேயே
வந்து விடுகிறார்கள் அவர்கள்
அடையாள அட்டையுடன்
பன்னாட்டுப் பள்ளியின்
சேர்க்கை முன்பதிவிற்காக
வீடுவீடாய்...

பெத்துப் போடுங்கள் நவீன அடிமைகளை..
அந்நிய முதலீட்டிற்கான மலிவான கூலிகளை..
அவர்களின் நிறுவனத்திற்கான
அடிமாடுகளை
தொழில்நுட்ப நுகத்தடிகளை

சுமக்க கழுத்தொடிந்த
காளையர்களைத் தயாரிக்கும்
கருப்பைப் பள்ளிகளை
இழுத்து மூடுங்கள்..
போதும்... போதும்...
இனியாவது திறப்போம் நாளை முதல்
நம் விடுதலைக்கான பள்ளியை...
புதிய பாடமாய்..!

- சதீஷ் குமரன்

Pin It