தனிமை
ரசனையானதாயிருக்கிறது
பிடித்த பாடலை
உரக்கக் கேட்கிறேன்!
பிடித்த உணவை
ரசித்து சாப்பிடுகிறேன்!
பிடித்த புத்தகத்தை
எழாமல் படித்து முடிக்கிறேன்!
ஒழுங்கெனும் பெயரில்
உலா வரும் கட்டுப்பாடுகளை
சிறிதே உடைத்தெறிகிறேன்!
நினைத்த இடத்தில்
அமர்கிறேன்!
நீலவானம் பார்க்கிறேன்!
அக்காகுருவியின்
ஒலி ரசிக்கிறேன்!
அசைகிற திரைச்சீலையின்
நடனம் கண்டு வியக்கிறேன்!
வீடெங்கும் இரைந்து கிடக்கும்
புத்தகக்குவியலோடு படுத்துறங்குகிறேன்!
யாரோ கதவைத் தட்டுகிறார்கள்...
தனிமை எழுந்து போகிறது!
நானோ தவித்துப் போகிறேன்!
- இசைமலர்