நெடுந்தூரம்
மைல்கற்களால்
கட்டப்படுகின்றன
இரு பக்கங்கள் நகர்தல்
இரு கண்ணுக்கும்
விருந்து
உருள உருள பூமியும்
உருளுதல்
புரிதலின் மிரளல்
தொடுவானம் சேர்ந்து வருகிறது
தொட்டுவிட்டேனோ
மறதி வருகிறது
வேகம் கூடுதலில் விசுக்கென
கண் கூசிப் போகிறது
சற்றுமுன் முந்திய பகல்
இன்றே சென்று இன்றே
வந்து விட்டது
பயணம்
போகவும் இல்லை
வரவும் இல்லை
பாதை
- கவிஜி