குளிர்படுத்தப்பட்ட
குழம்பி அருந்தும் விடுதியின்
மைய மேசையருகில்
கால் மேல் கால்
போட்டுக் கொண்டு
'ப்ரதர்' என்று சொல்லி
என்னிடம்
பேசிக் கொண்டிருந்த பெண்,
அவள் டி- சர்ட்டின்
முன்புறம் எழுதிய
வாசகத்தை மட்டுமே
வெகு நேரமாகப்
படித்துக் கொண்டிருந்ததாக,
நான் விடைபெற்றுச் சென்ற பின்
என்னைப் பற்றி
அவள் தோழியிடம்
சொல்லக் கூடும்...!
- -அவனி அரவிந்தன் (