வாசித்துக் காட்டும்படி
அழுத்தமாக ஒளிர்கிறது
அவமானத்தின் நிழல் ஒன்று
கூனிக் குறுகுதலின் வெட்கமொன்று
மௌனமாய் கசிகிறது
புலன்களைக் கூசி...
சூழ்நிலை..
நிர்ப்பந்தம்..
எதிர்பாராமை..
நம்பிக்கைத் துரோகம்..
நீளும் பட்டியலின் ஒவ்வொரு முனையிலும்
பாசிப் படர்கிறது,
தொட்டதும் வழுக்கும் பொருட்டு..
கைப்பிடியில்லாக் கத்தியின் கூர்மையை
ஆழமாய்ப் பதம் பார்த்து பழகிவிட்ட
வாழ்வின் அநாவசியங்கள்..
நுனி சீவி வீசும் செதில்கள் யாவும்..
இதயத்திலிருந்து உரிக்கப்பட்டவை
இதை..
சுலபமாய் மறந்துவிடுவார்கள்..
இப்போதும்..!
- இளங்கோ (