'மரணம்' அவனால் முடிந்த அளவு

அழகனாக, அப்பாவி யாக வந்தான்;

அவன்யா ரென்று எனக்குக் காட்டவே

முகத்தை மறைத்துக் கொண்டு வரவில்லை!

 

ஒருமனிதன் எப்படி இருப்பானோ அப்படி

அவன் அமைதியாக, சம்ர்த்தாக இருந்தான்!

என்னைத் தாண்டி அவன்கண் சிமிட்டும்

போது கண்களில் ஏக்கம் இருந்தது!

 

அவன்மிக அழகாக, கருணை வழிய

அறையின் குறுக்கே நடக்கும் போது,

ஊழ்வினைக் குள்ளே ரகசியமாய் இழுக்கையில்

என்னைப் பார்த்துப் புன்னகை சிந்தினான்!

 

மரணம் விசித்திர மானது; இருளில்

இன்னும் வசீகர மானது; முதன்முறை

அவனை சந்தித் ததனால் என்னையவன்

நடனம் ஆடச் சொல்லிக் கேட்டான்!

 

கதகதப் பானஅவன் கைகளில் எடுத்து,

கல்லறைக் குள்என்னை அணைத்துக் கொண்டான்;

மரணம் தவிர்க்க இயலாத மருட்சி;

எனக்கது என்றும் வேண்டும் என்று

 

அவனறிவான்; இதமான அணைப்பில் தொடங்கி

குளிர்ந்த முத்தத்தில் முடிவுக்கு வந்தது;

மரணமும் நானும் அறிவோம் எங்களை

எக்காலமும் பிரிக்க முடியா தென்பதை!

 

Pin It