அடிமை நிலையை ஒழித்துச் சுரண்டலின்
முடிவைக் கொணர மண்ணிற் கேற்ற
வழியே இயக்கப் பொருள்முதல் வாதம்
அழியாக் கருத்தைத் தெளிவாய்க் கூறும்
மார்க்சியம் தன்னைப் பார்ப்பனர்க் காக
நீர்க்கச் செய்து வறட்டுக் கருத்தை
ஏற்கச் சொல்லும் பொதுமைக் கட்சியே
நாற்புறம் நோக்கா அறிவிலி அல்லோம்
மண்ணின் பண்பை மறைத்து எதையும்
திண்மையாய்க் கூறலால் ஏற்றுக் கொள்ள

(அடிமைத்தனத்தை (முற்றிலும்) ஒழித்து, சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வர, அந்தந்த தேசத்தின் நிலைமைகளுக்கு ஏற்றபடி செயல்பட வேண்டும் என்று தான் பொருள் முதல் வாத மெய்ஞ்ஞானம் தெளிவாகக் கூறுகிறது. (ஆனால்) பார்ப்பனர்களின் சுரண்டல் கொள்ளை பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக, மார்க்சியத்தை நீர்க்கச் செய்து, வறட்டுக் கருத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லும் பொதுவுடைமைக் கட்சிகளே! மண்ணின் பண்பை மறைத்து (நீங்கள்) எதையும் உரக்கக் கூவிக் கூறுவதாலேயே அதைச் சரி என்று ஏற்றுக் கொள்ள (நாங்கள்) நான்கு பக்கமும் பார்க்காத அறிவிலிகள் அல்லோம்.

- இராமியா

Pin It