ஆயுள் ரேகை
எண்பத்தைந்துக்குக் குறையாதென்று
ஜாதகம் கணித்தவனிடம் முறையிட
தன் குழந்தையின் கையை
இடிபாடுகளுக்கிடையில் தேடிக் கொண்டிருக்கிறான்
இன்னமும் ஒருவன்.

Pin It