சிறகாய் இரு
மரமாய் இரு
பூக்களாய் இரு
புதர்களில் இரு
மானாய் இரு
புலியாய் இரு
பூச்சிகளில் இரு
புல்வெளிகளில் இரு
ஒற்றையடியாய் இரு
காணும் பச்சையாய் இரு
பச்சை வாசமாய் இரு
வீசும் சுவாசமாய் இரு
இலைகளாய் இரு
பருவங்களாய் இரு
எதுவுமே முடியாத போதும்
காடுள்ள மனமாகவாவது இரு

- கவிஜி

Pin It