books rackஉதறிக் கலைத்து
மாற்றி அடுக்கியதில்
இடம் மாறிய
மூன்றாம் வரிசையில்
இம்முறை எனக்குப் பிடித்த
கோணங்கியின் புத்தகம்...
முகம் திருப்பிக்
கொண்ட உன் சுஜாதாவின்
புத்தகத்தை,
ஐந்தாம் வரிசையில் கடைசியில்
ஒளிந்திருந்த
நகுலன் கவிதைகள்
அரவணைக்கிறது
மறதிகளின் அன்பாக...
பொய்க் கோபத்தோடு
உன் கைகள் தேடும்
வரிசையில் எனது
கைகளும் தேடுவது
கவிஜியின் கவிதைகளை
உன் கவிதைகள் களவாடிய
பொழுதுகளை...

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.