dusty street

புழுதி படிந்த தெருக்களின்
முகங்கள் அத்தனை எளிதாய்
மறக்கக் கூடியதாய் இல்லை....
கால்களை எண்ணிக்கைக்குள்
அடக்கும் முயற்சியினை எப்பொழுதோ
விட்டொழித்தாகி விட்டது...

புழுதி படிந்த தெருக்களின்
கட்சி, சாதி, மதம் எதுவென்று
யாரும் அறிந்திருக்கவில்லை...
அதன் மொழி கூட
அதீத இரகசியமாயிருந்தது!

புழுதி படிந்த தெருக்களின்
திண்ணைகள் எப்பொழுதும்
வெறுமையாய் இருப்பதேயில்லை....
அந்த ஜன்னல்களில் நிதமும்
செய்திகளிருக்கின்றன புதியதாய்
கண்டோ கேட்டோ !

புழுதி படிந்த தெருக்களில்
வானம் அத்தனை
வெண்மையாய் இருந்தது
வியப்புக்குரியதாய்!
காற்று இயல்பாய் வீசியது
அனைவருக்கும் பொதுவாய்.....

புழுதி படிந்த தெருக்களை
இப்பொழுது பார்க்கவே முடிவதில்லை...
அவை காணாமல் போனதனால்....

- பத்ம பிரியா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.