பத்மப்ரியா

உனதுயிர் தாய் தந்தை....
ஒளித்து மறைத்து ஊட்டி
உன்னை வளர்த்த உன் பாட்டி...
படிப்பையும் பண்பையும்
பகிர்தலாய் தந்த உன் ஆசிரியர்...
இவர்களோடு ஒரு கையும்...
உனது ஊர் நூலகம் - அதில்
நீ பயின்று வைத்த நூல்கள்..
நீ பயின்ற பள்ளி -அதில்
உனக்கான வகுப்பறைகள்...
உன் விளையாட்டுத் தோழனாய்
உன் வீட்டுத் திண்ணை - அதோடு சேர்ந்த
விளிம்பு கட்டிய நிலா முற்றம்...
இவைகளோடு மறு கையும்.. கோர்த்து
அமைதியாய் நான் நிற்க வேண்டும் - என்
ஆத்மாவின் நன்றியை நான் சொல்ல வேண்டும்.
அங்கே கலந்திருக்கும் உன் மூச்சுக்காற்றை
நான் சுவாசிக்கவும் வேண்டும்
உன்னை காதலிக்கிறேன் என்றால்
உன்னை மட்டுமா?
உன்னைச் சார்ந்த ஒவ்வொன்றையும் தான்.
- பத்மப்ரியா (padmapriya_