death man 386யாருக்கேனும்
உணர்ச்சிக் கிளர்ச்சியூட்டும் காதல்
கவிதைகள் வேண்டுமென்றால்
முன்பதிவு செய்துவாருங்கள்.
காத்திருக்கிறது எனது மரணம்.!

யாருக்கேனும்
ஒரு மரண வாக்குமூலத்தில்
கதை தயாரிக்க வேண்டுமெனில்
சொல்லி வையுங்கள்.
காத்திருக்கிறது எனது மரணம்..!

யாருக்கேனும்
காதல் தோல்வியிலோ
தொழில் நஷ்டத்திலோ
இருதயம் பாதித்திருந்தால்
என் மருத்துவரிடம் சொல்லிவிடுங்கள்
நன்றாக செயல்படும்
ஒர் இருதயத்தோடு
காத்திருக்கிறது எனது மரணம்.,!

யாருக்கேனும்
விழிகள் தேவையெனில்
எனது மருத்துவரை அழையுங்கள்.
நல்ல பார்வைத்திறங்கொண்ட
இரண்டு கண்களுடன்
காத்திருக்கிறது எனது மரணம்..!

யாருக்கேனும்
உடல் உறுப்பில்
எது வேண்டுமென்றாலும்
வாருங்கள் ! வாருங்கள் !!
மூளை, நுரையீரல் தவிர
அனைத்தும் இலவசம்...!
காத்திருக்கிறது எனது மரணம்..!

யாருக்கேனும்
நேர்மையான போலித்தனமற்ற
அன்பு, நட்பு, பாசம், காதல்
வேண்டுமென்றால்
உடனே வாருங்கள்..!

உங்களின் தாமதத்திற்கு
காத்திருப்பதில்லை எனது மரணம்..!

- இரா.சந்தோஷ் குமார்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.