lady 269

மிகுந்த சிந்தனைக்கு பின் கொடுக்கப்படும் முத்தம்
காதலிலோ காமத்திலோ சேர்வதில்லை

வாதத்தின் இறுதியில் கூச்சலிடும் மௌனத்தை
சற்றே அடக்கி வை
கேட்க விரும்பும் சொற்கள் அனைத்தையும்
பொருத்திப் பார்க்கிறேன்

மீண்டுமொரு முறை திரும்பி செல்கையில்
உள்ளங்கையை அழுத்தாதே

நேற்றைய இரவை தோலுரித்துப் போட்டுவிட்டது
நீ உச்சரித்த இறுதி "பெயர்"ச்சொல்

நீ சுக்குநூறாய் உடைத்த பூ ஜாடியை ஒட்டவைத்து
நம் மெத்தைக்கு அருகில் வைத்திருக்கிறேன்

இனியும் எனக்கு தேவையில்லை உன் கரிசனம்

உன் திமிருடன் இதோ இதையும் சேர்த்து எரித்துப் போடு

இப்படிக்கு
..................

*******

- ப்ரீத்தி ஸ்ரீதரன்

Comments

1 comment

1
naan Priyan
Kavithai miga arumai...vaarthaigal nerthiyaga payanpaduthap pattirukirathu.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.