கீற்றில் தேட...

lady 345பிரிவு

தொலைந்த ஒன்றிலிருந்து
மீட்டெடுக்கும்
வழியாக இருக்கலாம்….

நிம்மதிப் பெருமூச்சோ
நீடிக்கப் போகும் கண்ணீரோ
எதுவாகவும் இருக்கலாம்….

புன்னகையின் இறுதியாகவோ
புதிய பாதையின் தொடக்கமாகவோ
கூட இருக்கலாம்…..

கனவுகளின் நிழல் கிழித்து
நிஜத்தின் உண்மைகளை
உணர்த்துவதாகவும் இருக்கலாம்… அல்லது

பிரிவெண்பது உணர்த்தி விட்டுச் செல்லலாம்
தன் அர்த்தத்தை
ஒரு பிரிவின் மூலமாகவே….

ஒரு அழுகைக்குப் பின்னாக...

கழுவி துடைத்து பின்
அலங்கரித்துக் கொள்கின்றேன் - ஆனால்
சிவந்து கிடக்கும் கண்களுக்கு
வெள்ளை வர்ணம் அடிக்கும்
வித்தையை யாரிடம் போய்க்
கற்றுக் கொள்ள?

- சாயாசுந்தரம்