அது வதந்தியென்று
அந்த சிறப்பு அறிக்கை வெளியிடுவதற்கு முன்
எல்லாமும் நிகழ்ந்து விட்டது
சிலர் எரிக்கப்பட்டனர்
சிலர் கொல்லப்பட்டனர்
சிலர் காணாமல் போக்கடிக்கப்பட்டனர்
சற்று முன்பு வரை
அமைதியான நகரம்
சட்டென்று தீப்பற்றிக்கொண்டது
எங்கே ஓட முடியும்
எல்லா சாலைகளும் தன்னை மூடிக்கொண்டன
கூரிய ஆயுதங்கள்
வெடி குண்டுகள்
ரத்த சிதறல்
நெருப்புக் கதறல்
இவைகளுக்கு மட்டும் அனுமதியிருந்தது
புன்முறுவல் பூத்த வதந்தி
அரசாங்கத்தின் வாகனத்தில்
தொத்திக்கொண்டு பதுங்கிவிட்டது
அதற்குப் பிறகு மனிதர்கள்
அந்த நகரத்தில்
வாழ்ந்தார்களா என்று தெரியாது.
கீற்றில் தேட...
வதந்திக்குப் பிந்தைய உலகம்
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதைகள்