கீற்றில் தேட...

house 372வீட்டை இடித்து விட்டார்கள்
ஒவ்வொரு எலும்பாய் பிரித்தெடுத்துவிட்டார்கள்
சதையை அறுத்து
மாமிசத் துணுக்குகளாய் கொத்திவிட்டார்கள்
இதயத்தைப் பிடுங்கி எறிந்துவிட்டார்கள்
இனி அந்த வீட்டை
உயிர்தெழுப்ப முடியாது
அதே போலொரு வீடு
அந்த வீடாகாது
இடிக்கப்பட்ட ஒவ்வொரு வீடும்
தலைமுறைகளின் வாசனையைக் கொண்டிருக்கிறது
ஞாபகங்களாய் விரிந்திருக்கிறது
ஒரே வீட்டிலிருந்த
ஒவ்வொரு மனிதனின் நினைவும்
ஒரே மாதிரியல்ல
தினம் தோறும்
நினைவுகளால் வெள்ளையடிக்கப்படுவது வீடு

- கோசின்ரா