summer 360ஓர் ஏப்ரல் மாத மதியம்
அந்தி கருக்கல்
வேனிற்காலத் தொடக்கம்
இலையுதிர்ந்த மரங்கள் .
ஏதோ தொலைத்த ஒரு நிலை.
இல்லை இல்லை
வேண்டாததை
விட்டுத் தொலைத்த ஓர் உணர்வு,
துறவு நிலை.
இல்லை இல்லை
காலச் சுழற்சியின் குத்தல்கள்.
உயர்ந்த மரங்கள்
இலையுதிர்ந்த நிலை.
அதைக் கண்டு சிரிக்கும்
சிறிய கொடிவகைகள்.
புரியவில்லை
உச்சத்தைப் பார்த்து
படுத்திருந்தவனுக்கும்
அதே நிலை.
தன்னை மறந்து
தன்னினுள்ள இலைகளை
உதிர்க்க
தனைத் துறக்க முடியவில்லை.
புதிது புதிதாய் இலைகள்
கொழுந்துகள்
முளைத்து முளைத்து
அந்த முதிர்ந்த இலை
தளர்ந்து விழுமுன்
அந்தச் சுடுசூரியனை
பிரதி பலிக்க,
உயந்த பார்வை விழியின்
சின்ன சின்னதாய்
விளிம்புகளில்
சின்ன சின்னதாய்
கானல் நீர்களின் ஓட்டம்.
இலைகள் உதிரவில்லை.
கானல் நீர் இலைகள் துளிர்த்தன.

- இராமானுஜம்  மேகநாதன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.