இரயில் சிநேகம்
கொடுத்து
வாங்குமளவிற்கு
அந்நியோன்யப்பட்டாலும்
இறுதி வரை
இருக்கத்தான் செய்கிறது
சிறியதோர் பயம்
சிறியதோர்
இடைவெளி
மற்றும்
சிறியதோர்
எச்சரிக்கையுணர்வு
எல்லா
இரயில் சிநேகர்களிடமும்.
கதவுகள்
இன்றைய கதவுகள்
நாகரீகமானவை
நளினமானவை
உஷாரானவையும் கூட
விரல்களால்
தட்டுவதை விட
பொருள்களால்
தட்டினால்தான்
திறக்கின்றன.
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ