கீற்றில் தேட...

 

தனக்கான தர்க்கங்களுடனே

எல்லோரும் என்னைச்

சூழ்ந்திருக்கின்றனர்

சீரிழந்த மனங்களின் முடிவுகளில்

உண்மையின் வலியுறுத்தல்கள்

என ஏதுமில்லை-

எஞ்சி இருப்பன வெறும் ஏமாற்றங்களே

 

நான் புழங்கும் எண்களானது

என்னை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை

மீண்டும் மீண்டும் அதே

எண்களைப் பலமுறை

கூட்டிப் பார்க்கிறேன்

மேலிருந்து கீழாகவும்

கீழிருந்து மேலாகவும்- எண்கள்

என்னை ஒருபோதும் ஏமாற்றுவதே இல்லை!

 

- அருண் காந்தி(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)