நீரோடியத் தடமாய்
தூர்ந்துபோன கண்மாய்க்குள்
கருவேலம் புதர்கள் மண்டி
கூரிய முட்களில்
பல்வண்ண பூக்கள்போல்
பிளாஸ்டிக் பைகள் குலுங்க
ஆங்கு நொறுங்கிக்கிடக்கும்
நண்டோட்டுச் சில்லுகள்
மண் வெடிப்புகளில் மீன் கவிச்சு
அடி ஆழத்து மண்ணுக்குள்
இளஞ்சூடாய் ஈர நசநசப்பு
இவையாவும்
இன்னும் மிச்சமிருக்கும்
உயிர்த்துடிப்பின்
ஆதாரத் துணுக்குகள்
கண்மாய்க்கும் மனித இருப்புக்கும்
- வெ.வெங்கடாசலம்