மழை பெய்து ஓய்ந்திருக்கும்
ஒரு மாலையில்
கசிந்து வழியும் ஈரங்களில்
மறைந்து கிடக்கும் மெளனம்...
மிஞ்சியிருக்கும்
மழைத்துளிகளை
தூறிக்கொண்டிருக்கும்
மேகமெல்லாம்
எதையோ எதிரொலிக்கும்...
அமர்ந்திருக்கும் மர நிழலும்
சிதறிக்கிடக்கும் சிறுபூக்களும்
இனம்புரியா தேடலை
மென்மையாய் இயற்றுவிக்கும்...
அங்கும்
மழை ஓய்ந்த மாலையும்
ஈர மர நிழலும்
சிதறிய சிறு பூக்களும்
இருக்கிறதா?
எதையேனும்
இயற்றுவிக்கிறதா?
- தனி (