ரசிக்கப்படப்போகும்
ஒரு நிமிடத்திற்காய்
நாளின்
ஒராயிரம் நிமிடமெங்கிலும்
தொடரும் காத்திருப்புகள்...
பேசப்படுவதற்காய்
முன்குறித்த வார்த்தையோடு
பேசாத வார்த்தைகளெல்லாம்
தவமிருக்கும்...
கவிதையை விரும்பும்
ஒருவர் நிமித்தமேனும்
கவிதைகள்
எழுதப்பட்டுக்கொண்டே
இருக்கும்...
- தனி (