அறையெங்கும் நிறைந்திருக்கிறது
அத்துவானப் பேரமைதி
உதிர்ந்த மலரைப் போல
மௌனம் போர்த்திக் கிடக்கிறது காலம்
அரவமற்ற பொட்டலில் பெய்யும்
மாரியென கண்கள்
நத்தையென நகரும்
காதலற்ற வெறும்நாட்கள்
கூழாங்கல்லின் அடியில்
தேங்கிக் கிடக்கும் இருளைப் போல
தனித்த வாழ்வு
தானே போட்டு
தானே அருந்தும்
தேநீரின் சுவை போல
பகிரவென யாருமற்ற
கொடும்வாழ்வின் பக்கங்கள்
மிகுந்த கசப்பென்கிறேன்
நீங்களோ
பைத்தியம் என்ற
தாட்சண்யமற்ற ஒரு வார்த்தையில்
என் வாசலை
கடந்து போகிறீர்கள்
- க.உதயகுமார்