எல்லோரும் கூட்டமாய் சென்று கொண்டிருந்தார்கள்
அது ஒரு அமைதிப் பேரணியாக இருக்கலாம்
சிலர் ஆடி மகிழ்ந்தபடியே சென்றார்கள்
அது ஒரு வெற்றியின் கொண்டாட்டமாக இருக்கலாம்
அங்கொலித்த இசை என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை
அது தூங்குபவரை தட்டியெழுப்பும் யுக்தியாக இருக்கலாம்
அக்கூட்டமே ஒருவனை தோளில் சுமந்தபடி சென்றது
அவன் அக்கூட்டத்தின் கதாநாயகனாக இருக்கலாம்
வீதியெங்கும் பூவும் நாறும் சிதறிக்கிடந்தன
அவனுக்கு குவிந்த மாலைகளை உதாசீனப்படுத்தி இருக்கலாம்
வெகுசிலர் மட்டும் அங்கே சோகமாக நடந்து சென்றாரர்கள்
அவர்களுக்கு அந்த வெற்றி ஒரு தோல்வியாய் கூட இருக்கலாம்
அந்த ஊர்வலத்தின் கதாநாயகன் என் வயதையொத்தவனாக இருந்தான்
அவன் நானாகக் கூட இருக்கலாம்
- ப.பார்த்தசாரதி (