நீ தமிழன்
நானும் .
நீ இந்து
நானும்.
நீ உழைப்பாளி
நானும்.
நீ கருப்பு
நானும்.
நீ சுரண்டப்படுகிறாய்
நானும்.
பயிர்க்கடன் சுமையால் நீ
தற்கொலை செய்துகொள்கிறாய்.
நானோ
நிலமற்றவன்.
நீயும் நானும்
சீரழிவதற்கென்றே
திறந்துவைக்கப்பட்டிருக்கின்றன
மதுக்கடைகள்.
எது எப்படி இருந்தாலென்ன...?
உன் காலடியின்கீழ்க் கிடக்கவேண்டும் நான்.
உன் தோள்மீது அமர்ந்திருப்பவன் குறித்து
ஒரு கவலையுமில்லையுனக்கு.