உனக்கான
எந்த ஒரு சொல்லையும்
நீ என்னிடத்தில்
சொன்னதேயில்லை..!
உன் ஊருக்குச் செல்லும்
வழியை ஒரு போதும்
நீயெனக்கு
அறிமுகப்படுத்தவில்லை..!
உனக்கான மரணம்
அந்த வழியாகத் தான்
சென்றிருக்கக்கூடும்..!
இளமையின்
இரகசியப்பெட்டியில்
பூட்டி வைத்திருந்த உயிரை
மரணம் -
கள்ளச்சாவிப் போட்டு
திறந்து விட்டது..!
இசைக்கத் துவங்கும் போதே
ஊமையாகிப்போன
புல்லாங்குழல் நீ..!
உனக்கான இராகத்தை
என் மூச்சுக்காற்று..
இசைத்துக் கொண்டே இருக்கிறது..!
மரணம் -
ஒரு முறை தான்
நிகழும் என்பதை
நீ பொய்யாக்கி விட்டாய்..!
உன் வழியாக எனக்கு
ஒரு முறை
நிகழ்ந்து விட்டது..!
இன்னொரு முறைக்காக
காத்திருப்பின் வரிசையில்
வாழ்க்கை
நின்று கொண்டிருக்கிறது..!
எந்த ஒரு சொல்லையும்
நீ என்னிடத்தில்
சொன்னதேயில்லை..!
உன் ஊருக்குச் செல்லும்
வழியை ஒரு போதும்
நீயெனக்கு
அறிமுகப்படுத்தவில்லை..!
உனக்கான மரணம்
அந்த வழியாகத் தான்
சென்றிருக்கக்கூடும்..!
இளமையின்
இரகசியப்பெட்டியில்
பூட்டி வைத்திருந்த உயிரை
மரணம் -
கள்ளச்சாவிப் போட்டு
திறந்து விட்டது..!
இசைக்கத் துவங்கும் போதே
ஊமையாகிப்போன
புல்லாங்குழல் நீ..!
உனக்கான இராகத்தை
என் மூச்சுக்காற்று..
இசைத்துக் கொண்டே இருக்கிறது..!
மரணம் -
ஒரு முறை தான்
நிகழும் என்பதை
நீ பொய்யாக்கி விட்டாய்..!
உன் வழியாக எனக்கு
ஒரு முறை
நிகழ்ந்து விட்டது..!
இன்னொரு முறைக்காக
காத்திருப்பின் வரிசையில்
வாழ்க்கை
நின்று கொண்டிருக்கிறது..!