கீற்றில் தேட...

நேற்றிரவு பெய்த
கொஞ்சம் மழையும்
எனக்காகவே பெய்திருக்க வேண்டும்...

பின்னிரவு மழையையும்
முன்பனியின் வாடையையும்
முன்பொருநாள் கருக்கலில்
என்னிடத்தில் நீ
இயற்றுவித்த தனிமையையும்
என்னைப்போல் வேண்டுவோர்
யாராயிருக்கக் கூடும்...? 

- த‌னி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)