புகைக்கும் சிகரெட்டின்
இறுதி இழுப்பினிலும்
கோப்பையின்
கடைசி மதுத்துளிகள்
தொண்டையினை
நனைக்கும் வரையிலும்
ஜெயித்துவிட்டு
மறுபடி மறுபடி
பழையபடியே
தோற்றுப்போகின்றன.
உன்னை மறப்பதற்கான
என் முயற்சிகளனைத்தும். 

- கி.சார்லஸ்

Pin It