காரிருளின் திரைகளை
கண்ணாடி மின்னொளி
சன்னமாய்க் கிழித்துக்கொண்டிருந்த
முன் யாமத்தில்
கிழிக்கப்படாத இருளின்
ஏதோவோர் திரைக்குள்ளாய்
மறைந்தபடி நின்றிருந்தோம்
நீயும் நானும்...
உனக்கும் எனக்குமான
இடைவெளி எங்கிலும்
இருள்மட்டுமே நிறைந்திருந்தது...
ஆள்கொல்லும் முன்யாமத்தின்
அடர் இருளிலும்
உனக்கு மெனக்குமான
மெல்லிய இடைவெளி
மிக அழகாயிருந்தது...
- தனி (
கீற்றில் தேட...
மெல்லிய இடைவெளி
- விவரங்கள்
- தனி
- பிரிவு: கவிதைகள்