koodankulam_253ஒருவன் சாவதற்கு
நீயும் உனது அற்ப பிழைப்பும் போதும்
நடந்து போனவனின் வயிற்று வழியே குண்டு துளைக்க
உனது முடம் போதும்
ஒருவனை நமது விமானம் தாழ்வாகப் பறந்து மிரட்டி சாகடிக்க
உனது ஒடிந்த நெஞ்சு போதும்
குழந்தைகளை விரட்டி தாக்குவதற்கு
கிழடு தட்டிய உனது குளிர் கண்ணாடி கண்கள் போதும்.
நீண்ட இந்தப் போராட்ட வாழ்வில் பிஞ்சுகள்
மாவிலை பறித்து விளையாடவில்லை.
பெரியவர்களுக்கு சீமத்தண்ணி கூட
குறைவாக கிடைத்து விடவில்லை.
இளைஞர்கள் வெளிநாடு செல்ல
போலி விசா கூட வந்து விழுகவில்லை.

தலைவனாய் தாயாய் தாககோழியாய்
ஒருவன் அடித்துக்கொள்கிறான்.......
அவன் தேசத் துரோகி
தேடப்படும் பயங்கரவாதி...

உனக்கு மின்சாரம் கிடைக்கும்
வல்லரசு கிடைக்கும்
செய்தித் தாள்களை ஆகாமல் புரட்டு.
தொலைக்காட்சி பார்.. நோகாமல் ...
எது சொன்னாலும் வாங்கி ஒரு குப்பைத் தொட்டி போல
திணித்துக் கொண்டு புறப்படு..

எது கிடைத்தாலும் திணிக்க இடம் தரும்
உனது இந்த இடத்தில் தான்
இதோ இந்த மாபாதக திணிப்பு;

திணித்துப் புறப்படு அது உன் வழி இறங்கி
வம்சம் தழைக்கட்டும்..
வாழை அடி வாழையாய்
அது தள்ளுவது குலை என நம்பி அப்போதும் குரை....
உருக்குலைந்த தமிழினத்தின்
சதை முண்டுகளில் ஊசிவிட்டு திருகி
மின்சாரம் தேடு..

அந்தோணி ஜானும் சகாயமும்
உனக்காக ஒருபோதும் பிறக்க மாட்டார்கள்