ச்சோவென பெய்யுதே
அச்சச்சோ நனையுதே
மச்சமெல்லாம் குளிருதே
ச்சு ச்சு கொடுக்குதே
தொட்டாச்சிணுங்கி நாணத்திலே ஏதோ பன்னுது
பட்டாம்பூச்சி பருவத்துல பறந்து செல்லுது
தென்மேற்கு பருவமழை தேகத்தில் நனைந்திருக்கு
தேன்மொழியின் கண்ணுக்குள்ள குளமாய் நிறைந்திருக்கு
(ச்சோவென)
மழைக்காற்று வீசையிலே
மண் மணக்கும் பாதையிலே
உன் நினைவை பதித்துக் கொண்டு
உள்ளம் நடக்கும்
அந்தப் பாதையெல்லாம் கால்த்தடமாய்
பூத்து சிரிக்கும்
முல்லைப்பூ மலர்ந்திருந்தா
மூங்கிலுக்கும் வாசம் பிடிக்கும்
மொட்டுப்பூ படபடக்க
முத்து முத்தாய் முத்தம் கொடுக்கும்
(ச்சோவென)
அடைமழை காலத்திலே
ஆத்தோர தோப்புக்குள்ளே
உன்னுறவில் நனைந்து கொண்டு என் தேகம்
கவிதை சொல்லும்
கவிதையெல்லாம் உயிர்த்தெழுந்து உன்னோடு
ஊடல்கொள்ளும்
ஆவணியில் மழையடிச்சா
தாவணிக்கும் தாகமெடுக்கும்
நாலுமாசம் காத்திருந்தா
சேற்றில் விதையும் சினைபிடிக்கும்.
(ச்சோவென)