கீற்றில் தேட...

முனைந்து செய்கையில்
கலைந்துவிட்ட மண்பாண்டமாய்
ஒரு நேர்த்தியற்ற ஓவியமாய்
கலைந்து விடுகிறது
மனது.

உடைந்த கண்ணாடிச்சில்லுகளில்
நீ சேகரித்த எனது பிம்பமென
சிதறல்களாய் நான்.

என்னை முழுமையாய்
அறிய விரும்பாதவளாய் நீ.
உனக்குள் என்னை முழுமையாக்கும்
எந்த முயற்சிகளும் அற்று நான்.

இருந்தாலும்-
பிரிய இயலாமல்...
மூக்குக் கயிற்றால்
பிணைக்கப்பட்ட ஒரு மிருகமென
கசந்துகொண்டே
கடந்து விடுகிறோம்
நம் வாழ்வின்
சூரியன்களையும்...
நிலவுகளையும்.