கீற்றில் தேட...

விரிந்து அடங்கும்
சிறகுகளின் அதிர்வில்
நடுங்கத் துவங்கும் கூடு.

சிறகுகளை விரித்தவன்
சேகரிக்கப்பட்ட
தானியம் திருடியபின்
உருவத் துவங்குகிறான்
ஒவ்வொரு சுள்ளியாய்.

கலைந்தழியும் கூட்டிலிருந்து
உடைந்து வெளியேறும்
சில முட்டைக் கனவுகள்.

இரசித்தபடியே-
விரியத்துவங்கும் சிறகு...

இன்னொரு
கூடு நோக்கி.