கீற்றில் தேட...

சூடுதணியாத மனிதனின் வெப்பக்காடுகள்
தோல் கறுத்த எரிமலையின் சடலம்
வேரொடு வெட்டியெறியப்பட்ட அடிமரத்தின்
உதிர்ந்து போன மூச்சுகளின் முடிச்சுகள்
தார்ச் சாலையில் கிடக்கும்
ஏழை விவசாயின் கையளவு நிலத்தின் மீது
சிந்தப்பட்ட காயாத கண்ணீர்
உதடுகளுக்கு ஊடுருவி வெளியேற இயலாமல் கிடக்கும்
காதலின் உலர்ந்த சொல்
வெளியேற்றப்பட்ட உடலின் மீது
கவிழ்ந்து கிடக்கும் காயத்தின் மங்கிக் கறுத்த சிவப்பு நிறம்
தூக்குக் கயிற்றின் மொழி பெயர்க்கப்படாத வாக்குமூலம்
இவையெல்லாவற்றையும் வேறெங்கே வைக்க முடியும்?
கவிதை தன் கதவு திறந்து காத்துக் கொண்டிருக்கும் போது!!