உயிர் சிறகுகள் விரித்திருக்கும்
பட்டாம்பூச்சிகளை சேகரித்த
வெளிர்வண்ண குடுவையுடன்
தனிமையின் வனத்தில்
பயணிக்கிறாள் விழிகளற்றவள்..
கடக்கும் இலையற்ற மரம் ஒன்றிற்கு
ஒவ்வொரு பட்டாம்பூச்சியென
வெளியெடுத்து சின்னாபின்னமாக்கி
வனமெங்கும் பிய்த்தெறிகிறாள்..
வண்ணங்கள் தூவி தாழப் பறக்கும் பூவொன்று
அடர்வனத்தினூடே பயணிக்க
பிய்த்தெறியப்பட்ட ஒவ்வொரு அங்கமும்
புதுவண்ண பட்டாம்பூச்சியாக
சிறகுகள் விரிக்கின்றன...
வான்முழுதும் பட்டாம்பூச்சியாய் நிறைந்தபிறகு
இலையற்ற மரங்களில் தாவி தாவி
வனத்தைக் கடக்க துவங்குகிறார்கள்
கைகோர்த்தபடி பூவும் அவளும்...
- தேனப்பன் [