கீற்றில் தேட...

கனிந்த ஒரு இரவின் விரல் நுனி பற்றி
நெடுந்தூரப் பயணம்.
கருப்புப் பூனையின கண்களிலிருந்து
வழிந்திறங்கிய இருளை
வாஞ்சையுடன் நக்கீக்கொடுக்கிறது
உடன் வந்த இருள்.
காமத்தை உமிழும் இருளின்
மிகவும் நெருக்கமான அரவணைப்பில்
தாராளமாய் பகிர்ந்து கொள்கிறோம்
தடையில்லாமல் பல கோடி முத்தங்களை
முடிந்த வரை இடைவெளிகள் இல்லாமல்.
விடியலின் முகவரியென துளிர்த்தெழும்
முதல் ஒளிக் கீற்று
பூமியைத்  தழுவும்  முன்னே
அடர்த்தியுடன் பகிர்ந்து கொண்ட
நம்  முத்தங்களை
ஒளித்து வைக்க போராடுகிறோம்
நைந்து போன கால உறையினுள் இருக்கும்
வெளிச்சத்தின் கூர்முனை பட்டு
அவைகள் காயப்படாமல் இருக்க