கீற்றில் தேட...

மஞ்சள்
வறண்டு போன சருகுகள்

நீலம்
மேகம் தொலைத்த வானம்

வெள்ளை
செத்துப்போன நத்தைக்கூடு

சிகப்பு
கசாப்புக் கடைக்குப் போன
காளையின் இரத்தம்.

பச்சை
பட்டினி உடம்பில் நெளியும் நரம்பு

கருப்பு
உழவனின் வாழ்வு.

மழை மறுத்த கிராமத்தின்
வானவில்.