உன் கேள்விகள் நிறைந்த உலகில்...
விடைகளை யோசிக்கவே சிரமப்படுகிறேன்...
ஒரு குழந்தையை சமாதானப்படுத்தும் என் விடைகள்
உனக்கோ கேள்விகளாகவே புரிகிறது...
என் மௌனங்கள் உன்னை சுட்டெரிக்கும்...
ஆனால் அதில் அதிகம் வாடுவது நான்...
உன்னை புரியவைக்க நினைக்கும் போதெல்லாம்...
தானாக என் மனதில் வருவது
உன் அடுத்த கேள்வி என்னவாக இருக்குமென!!!!
- நித்யானந்த் சுப்ரமணியன்