கீற்றில் தேட...

 


பேருந்து நிறுத்தத்தில் தன்னந்தனியாக நிற்கிறவன்
தனிமையின் மீது
ஒரு பாடல்வரியை முணுமுணுத்தபடி
உடலின் ஒரு பகுதியை
அகழ்ந்துவிடும் எத்தனத்தில்
கைக்கெட்டும் அளவுக்கு
விரல்களால் தன் முதுகை சொறிந்தவாறு
முன்னரெப்போதோ கண்ட கனவில்
தன்னைக் கொலைசெய்யத் துரத்தினவன்
எதிர்ப்படுகிற
அச்சத்தில் அவசரமாய்
ஒரு இடத்தை தேர்வுசெய்து
சிறுநீர் கழித்தபின்
தனக்குக் கிடைத்த
தாற்காலிக நிம்மதியை
ரசித்தபடி
வானில் கடந்துசெல்கிற
பறவையின் பிடிபடாப் பாதையை
வியந்துகொண்டே
கொஞ்சம் கொஞ்சமாய்
இறந்துகொண்டிருக்கின்றான்.