*
வெற்றுத் தாளில் நிரம்புகிறது
உன்
என்
உரையாடல்கள்..
குளிர்ந்த கண்ணாடி டம்ளரில் மிதக்கும் திரவத்தின் தவம்..
வெற்றுத் தாளில் நிரம்புகிறது
உன்
என்
உரையாடல்கள்..
குளிர்ந்த கண்ணாடி டம்ளரில் மிதக்கும் திரவத்தின் தவம்..
அலுங்கி சிலிர்க்கிறது துளி உப்பைப் போல் கரையும்
ஓர் பகலின் அர்த்தத்தால்
தலைக்கு மேல் பறந்து போகும் பொய்கள்
உதிர்ந்து
அலைகின்றன
தரையிறங்கா பிடிவாதத்துடன் மனமற்ற இறகாக
நிதானமிழக்கும் பாதங்களின் நடனம்
கவ்விக் கொள்ளப் பிரியப்படுகிறது
தவிப்போடு மீட்டிவிட்ட
அபஸ்வரத்தின் இசையை
உன்
என்
வெற்றுத்தாளில்
யாவும் நிரம்புகிறது
இரவை ஒரு கார்பன் காகிதம் போல்
இடைச் செருகி..
*****
யாவும் நிரம்புகிறது
இரவை ஒரு கார்பன் காகிதம் போல்
இடைச் செருகி..
*****
--இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )