ஒரு மனிதன் வண்ணத்துப் பூச்சியின் கூட்டுப் புழு ஒன்றைக் கண்டான்.
ஒரு நாள் அதில் ஒரு சிறு துளை தோன்றியது.
அவன் அமர்ந்து வண்ணத்துப் பூச்சியை பல மணி நேரம் கவனித்தான்.
அது அதன் உடலை சிறு துளை வழியாக வெளி வர போராடிக் கொண்டிருந்தது.
மேலும் வெளி வர முடியாததால் அது சற்று நிறுத்தியது.

ஆகவே அவன் வண்ணத்துப் பூச்சிக்கு உதவ முடிவெடுத்தான்.
ஒரு கத்திரிக் கோலை எடுத்தான்.
கூட்டுப் புழுவின் பிரிவு படாத துகள்களை வெட்டினான்.
வண்ணத்துப் பூச்சி எளிதாக வெளியேறியது, ஆனால்
அதன் உடல் வீங்கியும், இறக்கைகள் சுருங்கியும் இருந்தன.

எந்த நிமிடத்திலும் அதன் இறக்கைகள் பெரிதாகியும், விரிந்தும்
அதன் உடலைத் தாங்கிப் பறக்குமென்று,
அந்த மனிதன் தொடர்ந்து அதைக் கவனித்தான்,
ஆனால் இரண்டும் நடக்கவில்லை!
உண்மையில் வண்ணத்துப் பூச்சி அதன் மீதமிருந்த வாழ்க்கையை
ஊர்ந்தே சுற்றிச் சுற்றி வந்தது.
அதனால் பறக்கவே முடியவில்லை.

அந்த மனிதன் அவன் அன்பினாலும்,
அவசரத்தினாலும்
புரிந்து கொள்ளாதது என்ன:
கூட்டுப் புழுவின் கட்டுப்பாடும், சிறு துளையின் வழியாக
வெளி வர வண்ணத்துப் பூச்சியின் போராட்டமும்
அதன் உடலிலிருந்து நீர்ச் சத்தை இறக்கைகளுக்குச் செலுத்தவும்
செலுத்திய பின் பறக்கத் தயாராவதற்குமே என்பது.

சில நேரங்களில் போராட்டம் என்பது வாழ்வின் நிதர்சனத்தை
அறிந்து கொள்ளத் தேவையே.
தடைகளின்றி வாழ்வது நம்மை ஊனமாக்கலாம்.
நமக்குத் தேவையான பலமின்றியும்,
பறக்க முடியாமலும் போகலாம்.

நான் வலிமையைக் கேட்டேன்...
சிரமங்கள் வந்தன-வல்லமை பெற்றேன்.

ஞானம் கேட்டேன்...
தீமைகள் வந்தன-தீர்வு கண்டேன்.

வளம் பெற வேண்டினேன்....
மூளையும், உடல் வலிமையும் பெற்றேன்.

சாதகமான சகாயம் கேட்டேன்...
வாய்ப்புகள் பெற்றேன்.

நான் கேட்டது எதுவும் பெறவில்லை
ஆனால் தேவையானது எல்லாம் கிடைத்தது.

பயமின்றி வாழ்க்கையை வாழுங்கள், தடைகளை துணிவுடன் எதிர் கொள்ளுங்கள்
துணிவே துணை, வெற்றி நமதே.

(The Story of the Butterfly - தமிழாக்கம் - வ.க.கன்னியப்பன்)

- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It