கீற்றில் தேட...

அவென்யூவின்
நாற்சதுரப் பள்ளங்களில்
அடைப்பெடுக்க
ஆள் தேடி..
 
இறங்கிக் கறுப்பாகி
இடுக்கெல்லாம் குத்தி..
மயிற்கற்றையும்.,
பஞ்சுக் குப்பையும்
அள்ளிப் போட்டவனுக்கு..
 
ஆயிரத்தை ஐநூறாக்கி.,
அனுப்பிய பின்.,
கறுப்புத் திட்டாய்
நாறிக் கிடக்கிறது..
 
வயிற்றுப் பசியோடு
வந்த அவனை
இறக்கி விட்டதற்கான
உறுத்தல்..

- தேனம்மை லெக்ஷ்மணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)