கீற்றில் தேட...

சாதி

நாகரிக சந்தையில்
நாறிக்கொண்டிருக்கும்
கருவாடு.

கலப்படம்

படித்தவர்களின் பற்பசையும் விசமாகிறது
கற்கும் கல்வியிலும்
சாதிக்கலப்படம்.

மவுன யுத்தம்

எனது சாதி அவரைத் தடுக்கிறது
அவரது சாதி என்னைத் தடுக்கிறது
இருவருமே பேசிக்கொள்வதில்லை.


முப்பால் முனி

புலிப்பால் குடித்தவன்
       vs
சாதிப்பால் குடித்தவன்

சாகக்கிடக்கிறான் சாமி

தாய்ப்பால் குடித்தவன்

1.75  லட்சம் கோடி

இலவச முட்டை போட்டு
திருப்பதியில் மொட்டை
அடித்ததில் கிடைத்த நிகர லாபத்திலும்
மீதியிருக்கு சாமி சாதி.