உடைத்தெறியப்பட்ட பொம்மைகள்
கிழித்தெறியப்பட்ட காகிதங்கள்
டோரா புஜ்ஜி ஸ்டிக்கர்களால்
ஓட்டப்பட்ட பீரோ, மேஜைகள்
பென்சில்களாலும் கிரேயான்களாலும்
கிறுக்கப்பட்டு நவீன ஓவியங்களாய்
காட்சியளிக்கும் சுவர்கள்
அவ்வப்போது
மரித்துவிடும் என்
மனதை இதழ் அமுதத்தாலும்
மழலை மொழியாலும் உயிர்தெழவைக்கும்
இவர்கள் எனக்கே எனக்காய்
அழகியதொரு உலகை படைக்கும்
அழகிய பிரம்மாக்கள்.......
- சக்திவேல் (